தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருந்த சிறுமி உயிரிழப்பு
அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 10 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த எரிபொருள் தாங்கி ஒன்றே மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்