ஆசிட் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதிய கேஸ் சிலிண்டர் லொறி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை ஆசிட் ஏற்றிச் சென்ற லொறியும் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லொறியும்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இடம் பெற்ற விபத்தில் ஆசிட் லொறியின் வால்வு திறந்து ஆசிட் வீதியில் கொட்டியதில் புகை எழுந்ததால், வாகன சாரதிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஆசிட் மீது தண்ணீர் மற்றும் ரசாயன கலவையை இட்டு புகை கசிவை கட்டுப்படுத்தினர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்