
கடுகதி ரயிலுடன் மோதிய சரக்கு ரயில்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் அதன் மீது மோதியுள்ளது.
இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு உருக்குலைந்தன.
இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
