மதுபோதையில் வீதியில் படுத்து உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில், மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த சபாரத்தினம் கெங்காதரன் (வயது 56) என்ற, மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், மதுபோதையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம1 வீதியில் உறங்கியுள்ளார்.

இதன்போது, வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர், அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, நேற்று வெள்ளிக்கிழமை உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.