இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்
தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணின் வீட்டிற்கு சுகாதாரப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் சுகாதார ஊழியர்களை தனது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவருக்கு 60,000 நியூ தைவான் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண் பலமுறை சுகாதார ஊழியர்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுதுள்ளார். அதன் பின், இது தொடர்பாக பொலிஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் அந்த பெண்ணிடம் அவரது தந்தை குறித்து கேட்ட போது முதலில், அந்தப் பெண் தனது தந்தை முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.
பின்னர், தனது தந்தையை சீனாவிற்கு தனது சகோதரர் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். பின்னர் தனது தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாகவும், அங்கிருந்து இவரின் உடலை எடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு முறணான பதில் அளித்த பெண்ணில் சந்தேகமடைந்த பொலிஸார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தனது தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், தனது தந்தையின் உடலை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். பெண்ணின் தந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்