
சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால், சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை.
குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

