
சுய மதிப்பீட்டு பயிற்சி மற்றும் மேம்பாட்டை மையமாக கொண்ட கருத்தாக்கம்
-கிண்ணியா நிருபர்-
அறிவு ஒளி மையத்தில் பயன் பெறும் மாணவர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் மனநிலையுடன் சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுயமதிப்பீட்டு பயிற்சி மற்றும் மேம்பாட்டை மையமாக கொண்ட ஒரு கருத்தாக்கம் நேற்று ஞாயிற்றுக் கிழமை திருக்கோணமலை நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருக்கோணமலை செயலாளர் இராஜசேகர் நகர சபையினது சேவை மற்றும் அதனோடு இணைந்து இந்த மக்களது பங்கு இளைய சமுதாயத்தின் தேவை என்பனவற்றை எடுத்துரைத்தார்.
இந்த கருத்தாக்க நிகழ்வினை வழிநடத்தி வளவாளர் கணேஷ் அவர்கள் சிறப்பான முறையில் மாணவர்களது விருத்தியை மேல்நோக்கும் விதமாக செயற்படுத்தினார்.
இந்த நிகழ்வின் இருதியில் அறிவு ஒளி மைய பணிப்பாளர் உதயகுமார் அஜித் குமார் அவர்கள் மாணவர்களது தேவைகள் சிலவற்றை அடுத்து வரும் மாணவர் மன்றக் கூட்டத்தில் செய்து தருவதாக உறுதியளித்தார் மேலும் இந்த நிகழ்வை முழுவதுமாக அறிவு ஒளி மையத்தின் நிர்வாகச் செயலாளர் டிலக்ஷிகா புகழ்வேந்தன் அவர்கள் ஒளுங்கமைத்து இருந்தமை குறிப்பிட தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
