காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை, நேற்று வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த, அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு கடந்த வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது, தாயார் பனடோல் சிரப் கொடுத்துள்ளார், அதன் பின்னர் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்த குழந்தை, வெள்ளிக்கிழமை காலை மயக்கமடைந்துள்ளது.
குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார், சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.