சுவிட்சர்லாந்தில் வீதியை கடக்க முயன்ற 13 வயது சிறுமியை மோதிய கார்

சுவிட்சர்லாந்து ஸ்கொப்லாண்ட் (Schöftland) நகரில் ஹோல்சிகர்ஸ்ட்ராஸ் (Holzikerstrasse) பகுதியில் பாதசாரி கடவையில் சிறுமி ஒருவரை கார் ஒன்று மோதியதில் சிறுமி காயமடைந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

13 வயதான குறித்த சிறுமி அப்பகுதியில் உள்ள வீதியை கடக்க முற்பட்ட போது அங்கு வந்த வெள்ளை நிற பி எம் டபிளயூ (BMW) காரொன்று சிறுமியை மோதியுள்ளது.

காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தகவல் தொரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்

(தொலைபேசி 062 886 88 88 / mobilepolizei@kapo.ag.ch)

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்