
கொழும்பில் முக்கிய வீதியின் குறுக்கே விமுந்துள்ள விளம்பர பலகை
கொழும்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை வீசிய கடும் காற்றின் காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு முன்னால் உள்ள பாரிய விளம்பர பலகை ஒன்று சற்று முன்னர் உடைந்து வீதிக்கு குறுக்காக விழுந்துள்ளது.
இந்த விளம்பர பலகை வீதியை மறித்தவாறு விழுந்ததால் கொழும்பு பௌத்தாலோக வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை அகற்றும் பணி துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
