மாணவியின் தாய்க்கும் பெண் ஆசிரியருக்கும் மலர்ந்த காதல்
கம்பஹா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணும் கந்தானை பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய பாடசாலை ஆசிரியையுமே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.
சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருகையில்,
வத்தளை பகுதியை சேர்ந்த பெண் தனது குழந்தையை கந்தானை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அழைத்து செல்வது வழக்கம், இந்த நிலையில் குறித்த பிள்ளையின் தாய்க்கும் பாடசாலை ஆசிரியருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் நாளில் அது காதலாக மலர்ந்துள்ளது.
இதனையடுத்து திடீரென இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனால் தனது மனைவியை காணவில்லை என குறித்த ஆசிரியையின் கணவர் கந்தானை பொலிஸாரிடமும் மற்றய நபர் வத்தளை பொலிஸாரிடமும் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இவர்கள் பற்றிய புகைப்படங்களை நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டி தளதா மாளிகையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் கண்களில் இவர்கள் அகப்பட்டுள்ளனர்.
பின்னர் கண்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் கண்டியில் உள்ள சுதுகும்பல என்ற இடத்தில் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்களுடைய கணவன்மார்க்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்த குறித்த பெண்களின் கணவன்மாருடன் பொலிஸார் சமாதான பேச்சுவார்த்தையை நடாத்தி அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இருந்த போதிலும் இருவரும் தங்களை பிரித்து விட வேண்டாம் என கட்டி தழுவி அழுதுள்ளனர்.
இவர்களில் ஒருவருடைய கணவன் தமது குழந்தையையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவந்துள்ளதோடு குழந்தை தாயிடம் வீட்டிற்கு வருமாறு அழுதுள்ளதாக கூறப்படுகின்றது.
இறுதியாக பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையின் மத்தியில் இருவரும் தத்தமது கணவன்மாருடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
