மட்டு. போரதீவுப்பற்றில் பிரதேச கலாசார விழா
-கல்முனை நிருபர்-
போரதீவுப்பற்று பிரதேச கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பிரதேச கலாசார இலக்கிய விழா பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கலந்துகொண்டார். விசேடஅதிதியாக புனர்வாழ்வு அமைச்சின் ஓய்வுபெற்ற மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன் உட்பட கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு போரதீவுப்பற்று பிரதேச மக்களின் கலை, கலாசார, பண்பாடு தொடர்பான ஆற்றுகைகளை வெளிப்படுத்தும் வகையிலான மருதம் எனும் சிறப்பு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது. அத்துடன் பிரதேச கலைஞர்களினால் நடனம், பாடல், நாடகம், போன்ற கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பிரதேசத்திலுள்ள மூத்த கலைஞர்களும் கௌரவிக்கப்ட்டனர்.