இன்று முதல் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை
கொழும்பு நகரை சூழவுள்ள இருபது இடங்களில் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் இன்று முதல் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளது.
முட்டையின் விலை நுகர்வோருக்கு எட்டாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடத்திய கலந்துரையாடலில் முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் தெரிவித்த இணக்கப்பாட்டின் பிரகாரம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று புதன்கிழமை கொழும்பு நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை சுற்றி 20 லொறிகள் மூலம் முட்டை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோட்டை புகையிரத நிலையம், தெமட்டகொட, கொம்பஞ்சவீதிய, தெஹிவளை, பத்தரமுல்ல, நுகேகொட, மஹரகம, மீகொட மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையம் மற்றும் ஹோமாகம ஆகிய இடங்களில் முட்டைகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் வத்தளை, ஜாஎல, ராகம, நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை, பேலியகொட ஆகிய நகரங்களில் 55 ரூபா விலையில் அந்தந்த லொறிகளில் இருந்து முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.