உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகளவில் 7000 கோடி வசூலை குவித்துள்ளது.
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரையரங்குகளில் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இப்படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை குவித்துள்ளது.
இந்தியாவில் வெளியாகி வெறும் 10 நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வரும் நாட்களில் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் முன்பு கூறியபடி, 2 பில்லியன் டாலர் வசூலை இப்படம் எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அறிக்கைகளின்படி, அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வெளியாகி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் அரங்கம் நிறைந்த காட்சிகள் இருந்ததாக தெரிகிறது.
இந்தியாவில் சனிக்கிழமை (டிசம்பர் 24) படம் ரூ.21 கோடி வசூலித்த நிலையில்,இதன் மூலம் த்ரிஷ்யம் 2,பிரம்மாஸ்திரா மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களின் வாழ்நாள் வசூலை, அவதார்: தி வே ஆஃப் வாட்டர் மிஞ்சியுள்ளது.
இவைகளின் மொத்த வசூல் 220 – 260 கோடிக்குள் அடங்கும். அதோடு, அவதார்: தி வே ஆஃப் வாட்டர் சர்வதேச அளவில் 600 மில்லியனையும், வட அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 250 மில்லியனையும் கடந்துள்ளது. இது மொத்தம் 850 மில்லியன்,அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.7000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.