இரண்டு ரயில் பெட்டிகளுக்கு நடுவே சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன்
இளைஞர் ஒருவர் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு நடுவே சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில், அக்குரஸ்ஸ நோக்கி பயணித்த, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சிக்கியுள்ளார்.
ரயில் பெட்டிகளுக்கு நடுவே இளைஞர் சிக்கியிருப்பதை கண்டு, சக பயணிகள் ரயிலை நிறுத்தி, காயங்களுடன் இளைஞரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் நோயாளர் காவு வண்டி மூலமாக பலப்பிட்டிய ரயில் நிலையத்திலிருந்து, பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.