Last updated on January 4th, 2023 at 06:53 am

பெண்ணிற்கு எமனான சேலை

பெண்ணிற்கு எமனான சேலை

-யாழ் நிருபர்-

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணும் அவரது மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, அவரது சேலை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்து சம்மவித்ததனால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்