ஐஸ் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளுடன் இருவர் கைது
18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24, 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.