குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று திங்கட்கிழமை காலை துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.
கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன், மருமகள் மற்றும் அவரது பேரக்குழந்தையுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர்கள் இன்று அதிகாலை 2.55 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக கதவல்கள் தெரிவிக்கின்றன.