முட்டை ஒன்றினை 50 முதல் 55 ரூபாய் வரையில் விற்க ஒப்புதல்
முட்டை ஒன்றினை 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையில் விற்பனை செய்ய கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாடு மற்றும் அதன் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இன்று திங்கட்கிழமை காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்நாயக்க அழககோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மற்ற சங்கங்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர், கொழும்பு நகரிலுள்ள நுகர்வோருக்கு 55 ரூபா சில்லறை விலையில் இடைத்தரகர்கள் இன்றி முட்டையொன்று விற்பனை செய்யப்படும், என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்நாயக்க அழககோன், கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்துள்ளார்.