Last updated on April 11th, 2023 at 07:29 pm

516 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு வந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது

516 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு வந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது

கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த MV Silver Spirit என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.

சுற்றுலாப் பயணிகள், கொழும்பில் உள்ள சுற்றுலா இடங்கள், இசை நிகழ்வுளை ரசித்த பின்னர் திருகோணமலை நோக்கி பயணித்தனர்.

இதன்படி காலை திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தனர்,  இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைத்த மிகப்பெரிய பயணிகள் கப்பல் இதுவாகும்.

இவர்கள் திருகோணமலை, சிகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கு  செல்லவுள்ளனர்.

இலங்கை பயணத்தை முடித்து நாளை அதிகாலை தாய்லாந்து, நோக்கி பயணிப்பார்கள், தொடர்ந்து இவர்கள் மலேஷியாஇ சிங்கப்பூருக்கு செல்லவுள்ளனர்.

கப்பலின் வருகையால் 21 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் என திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.