மட்டு.வாழைச்சேனையில் ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிப்பு
-வாழைச்சேனை நிருபர்-
சுனாமி கடற்கோள் அனர்த்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18 ஆவது நினைவஞ்சலியும், ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று திங்கட்கிழமை பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.
பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில், மௌன இறைவணக்கம், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மத வழிபாட்டு நிகழ்வுகளும், அன்னதானம் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் சுனாமி பேரலையினால் 512 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.