யாழில் 5 கைதிகள் விடுதலை
-யாழ் நிருபர்-
நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
கிறிஸ்தவர்களின் பண்டிகையான நத்தார் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடாளாவிய ரீதியில் 309 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதற்கமைவாக, சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றவற்றால் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகளே பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.