மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தும்பளை செம்மண்பிட்டியில், நேற்று சனிக்கிழமை மதில் இடிந்து வீழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
விக்னராஜா கிருஷ்ணன் (வயது-32) என்பவரே உயிரிழந்தவராவார்.
வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது மதில் இடிந்து வீழ்ந்ததாக, பருத்தித்துறைப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலையில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.