Last updated on January 4th, 2023 at 06:54 am

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி தீ விபத்து

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி தீ விபத்து

 

மட்டக்களப்பு – ஏறாவூரில் மின்னல் தாக்கியதில் ஆட்டுக்கொட்டகை ஒன்று தீக்கிரையாகி, கொட்டகையினுள் இருந்த ஆடு, கோழி, வாத்து என்பன உயிரிழந்துள்ளன.

நேற்று சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழையால் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் ஏறாவூர் – நாவலடி வீதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஆடு மற்றும் கோழிகள் வளர்த்த கொட்டகை ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கொட்டகையினுள் இருந்த ஆடு, கோழி, வாத்து என்பன உயிரிழந்துள்ளன.

இதில் 08 ஆடுகளும், 11 கோழிகளும், 4 வாத்துகளுமே இவ்வாறு மின்னல் தாக்கி தீக்கிரையாகி உயிரிழந்துள்ளன.