Last updated on January 4th, 2023 at 06:54 am

இரசாயன உர இறக்குமதிக்கான தடை தளர்வு

இரசாயன உர இறக்குமதிக்கான தடை தளர்வு

இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ், க்ளைபொசேட், யூரியா, அமொனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட இரசாயன உரங்களை திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும்.

இதேவேளை, சோள இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டு, கால்நடைக்கான தீவனம் தவிர்ந்த ஏனைய இறக்குமதியாளர்கள் ஜனவரி 15ஆம் திகதி வரையில் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.