Last updated on January 4th, 2023 at 06:54 am

ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்துார் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியை சேர்ந்த செ.ராகுலன் (வயது 25) என்ற இளைஞன் இன்று காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.