Last updated on January 4th, 2023 at 06:54 am

7 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

7 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதனடிப்படையில்,

பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 5.00 ரூபா குறைக்கப்பட்டு, 185.00 ரூபா

பருப்பு  ஒரு கிலோவுக்கு 11.00 ரூபா குறைக்கப்பட்டு, 374.00 ரூபா

டின் மீன் (உள்நாட்டு) 15.00 ரூபா குறைக்கப்பட்டு, 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபா

மிளகாய்   ஒரு கிலோவுக்கு 15.00 ரூபா குறைக்கப்பட்டு, 1,780.00 ரூபா

நெத்தலி   ஒரு கிலோவுக்கு 50.00 ரூபா குறைக்கப்பட்டு, 1,100.00 ரூபா

வெள்ளை சீனி  ஒரு கிலோவுக்கு 6.00 ரூபா குறைக்கப்பட்டு, 218.00 ரூபா

உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கு 5.00 ரூபா குறைக்கப்பட்டு, 285.00 ரூபா