துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி
சீதுவ, கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீதுவ, கொட்டுகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில், 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்