கட்டையால் தாக்கி மனைவியை கொலை செய்த நபர்

வாரியாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பேலியத்த,  பமுனகொடுவா பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணை கட்டையால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

55 வயதுடைய தம்பேலியத்த,  பமுனகொடுவா பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கொலையின் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.