மியான்மார் அகதிகளுக்கு 19 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

 

யாழ். சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மார் அகதிகளுக்கு சுமார் 19 இலட்சம் பெறுமதியான அவசர தேவைப் பொருட்களை, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையில், ‘மெசிடோ’ நிறுவனத்தின் இயக்குனர் யாட்ஸ்சன் பிகிறாடோ தலைமையில் நிறுவனப்பிரதிநிகள் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். சிறைச்சாலையில் வைத்து வழங்கினர்.

அண்மையில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பை ஆரம்பித்த கடலில் தத்தளித்த படகிலிருந்து சுமார் 105 மியான்மர் அகதிகள் கடற் படையினரால் மீட்கப்பட்டனர்.

பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்டவிரோதமாக பயணித்தபோது நடுக்கடலில் படகு பழுதடைந்து 3 வாரங்களாக நடுக்கடலில் தத்தளித்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் படகில் பயணித்த 105 பேரில் 104 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அதேநேரம் படகு உரிமையாளர் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அவர்களை யாழ் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள்,இ மருந்து பொருட்கள், பால்மா வகைகள், ஆடைகள், சவக்கார வகைகள் உட்பட அவசர தேவை பொருட்களை குறித்த நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.