அடைமழையால் தாழ் நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கடிப்பு

-கிண்ணியா நிருபர்-

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று திங்கட்கிழமை காலை முதல் மழை தொடர்ந்து பெய்கிறது.

இதனால் முள்ளிப்பொத்தானை நிஸ்கோ வீதியும், அப்பிரதேசமும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.