
தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை
களுத்துறை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நபரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுத்துறை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
