சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று

-யாழ் நிருபர்-

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தரலிங்கம் கிரிதரன் (37 வயது) உயிரிழந்தார்.

சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், நேற்று ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு,  இன்று திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம் பெற்று அடக்கம் செய்யப்பட்டது.