
தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் இன்று
கடந்த 15ஆம் திகதி பொரளை பொது மயானத்திற்கு தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் வந்த வழிகள் தொடர்பில் புலனாய்வாளர்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சாலைகளில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பல துறைகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வர்ணனையாளரான பிரையன் தாமஸ் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
ஜனசக்தி நிறுவனத்தின் இயக்குநரான தினேஷ் ஷாப்டர், கிரிக்கெட் நிர்வாகியும் தொழிலதிபருமான சந்திரா ஷாப்டரின் மகன் ஆவார்.
பொரளை பொது மயானத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
