உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்

 

-மன்னார் நிருபர்-

நாட்டினையும் மன்னார் மாவட்டத்தினையும் உணவு பாதுகாப்பின்மை மற்றும் மந்த போசணையில் இருந்து விடுவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், சமுர்த்தி திணைக்களம், விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், கால்நடை சுகாதார திணைக்களம், பனை அபிவிருத்தி சபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு பற்றுதலோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த கண்காட்சியும், விற்பனையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது, பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிக்கும் வகையில் பயணாளிகளுக்கு விதைகள் வழங்கும் வகையில், பிரதேசச் செயலாளர்களிடம் ஒரு தொகை விதைகள் கையளிக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் குறித்த உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இடம் பெற்றது.