தனது இறுதிப் போட்டியை அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி
ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் கப்டன் லியோனல் மெஸ்ஸி, இந்த ஆண்டு உலகக் கோப்பை தான் தனது கடைசி உலகக் கோப்பை என்று அறிவித்துள்ளார்.
அதன்படி கத்தாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டி மெஸ்ஸியின் இறுதிப் போட்டியாகும்.
இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது.
தனது 5வது உலகக் கோப்பையில் விளையாடி வரும் 35 வயதான மெஸ்ஸி, 11 கோல்கள் அடித்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டினா சார்பில் அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.