இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டீனா
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு பலம் வாய்ந்த ஆர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் குரோஷியாவை 3 – 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆர்ஜென்டீனா இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணிக்காக நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியும் ஒரு கோல் பெற்றார்.
ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் பெனால்டி உதை மூலம் மெஸ்ஸி கோல் அடித்தார்.
பின்னர், ஆர்ஜென்டீன அணிக்காக ஜூலியன் அல்வாரெஸ் இரண்டாவது கோலை அடித்தார்.
போட்டியின் முதல் பாதியின் முடிவில் ஆர்ஜென்டீனா 2-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மீண்டும் சுறுசுறுப்பாக விளையாடிய ஆர்ஜென்டீனா, ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலைப் போட்டது.