கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்காக தியாகம் செய்ததால் தற்போது துன்பப்படுகிறார்

இலங்கை மக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது துன்பப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே பசில் ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மக்களுக்காக தியாகம் செய்ததாகவும். ஆனால் அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்தார்;

இதே போன்ற தியாகத்தை நீங்கள் செய்வீர்களா என அவரிடம் வினவியபோது. தேவை ஏற்பட்டால் தனது இரட்டை குடியுரிமையை கைவிடுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் தனது குடியுரிமையைத் துறப்பாரா? அல்லது இது தொடர்பாக அரசியலமைப்பு விதிகளைத் திருத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்துவாரா? என்று குறித்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டபோது. ​​”தேவை ஏற்படும் போது அதை செய்வேன். எனினும் தற்போது அவ்வாறான தேவை இல்லை” என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பீதி அடையாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும், எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.