துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உயிரிழப்பு

இத்தாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் ரோமில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஒருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

குடியிருப்புத் தொகுதியொன்றில் வசிப்பவர்களுக்கான கூட்டமொன்றின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் குளோடியோ கெம்பி (57 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது நண்பர் என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.