
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம்
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந் நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சுங்க பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்காக 14 பேர் கொண்ட சுங்க ஊழியர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து புறப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் (பிராந்திய சேவைகள்) டி.ஏ.எம்.ஆர். சாகர நேற்று தெரிவித்தார்.
முதல் விமானம் முற்பகல் 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.
இதனையடுத்து எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.
அதன்படி, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
