மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை வேளையில் மழை

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்இ இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.