மாகாண மற்றும் மாவட்டங்களுக்கிடையே இறைச்சி கொண்டு செல்ல தடை

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையில்  மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைய நாட்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்தே ஜனாதிபதியினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.