
50 ரூபாய்க்கு முட்டையை விற்பனை செய்ய இணக்கம்
50 ரூபாவுக்கு முட்டை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக, வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் இதனை தெரிவித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனத்தின் விலை தற்போது குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் கால்நடை தீவனத்தின் விலை தொடர்ந்து குறையும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டை உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களின் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
