
உடலுறவுக்கு மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
இந்தியா-உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தலைமுடி வெட்டப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேசம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் முகமது அன்வர் என்பவரின் மனைவியான ருக்ஷர் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தனது மனைவியை காணவில்லை என அன்வர் சில நாட்களுக்கு முன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் அன்வரிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.
பொலிஸாரிடம் அன்வர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
அன்வருக்கும், ருஷ்கருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது, இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்று இரவு அன்வர் தனது மனைவி ருக்ஷருடன் உடலுறவு கொண்டுள்ளார்.
இதன்பின்னர் இருவரும் உறக்க சென்றுவிட்டனர், சிறிதுநேரம் கழித்து கண் விழித்த அன்வர் மனைவியை மீண்டும் உடலுறவுக்கு வருமாறு அழைத்துள்ளார், இதற்கு ருக்ஷர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நள்ளிரவில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அன்வர் தனது மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைத்து, மனைவியை காணவி;லை என நாடகமாட முடிவு செய்த அன்வர் தனது மனைவியின் தலைமுடியை வெட்டியுள்ளார்.
அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி அதிகாலை வேளையில் தனது ஊரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளார்.
இதற்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அதன்பின், உறவினர்களிடம் மனைவியை காணவில்லை எனக் கூறி தேடுதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் அன்வர். மேலும் தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க பொலிஸ் நிலையத்திலும் மனைவியை காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணையில் இறங்கிய போது அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் குறித்து தகவல் தெரியவர அங்கு சென்று விசாரித்துள்ளனர்.
இதன்பின்னரே குறித்த சடலம் ருக்ஷருடையது என தெரியவந்துள்ளது. பொலிஸாரின் கடுமையான விசாரணையில் அன்வர் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சகோதர் டேனிஷ் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
