27 விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை அவையவங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 27 விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை அவையவங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க இச்சூழ்நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான உதவிகளினை விசேட தேவையுடையோர் மீது வழங்குவது சிறப்பிற்குரியது.

விசேட தேவையுடையோரை ஒருபோதும் வேறுபடுத்தி நோக்க முடியாது. அவர்களுடைய தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

செயற்கை அவையமொன்றின் பெறுமதி 50000 ரூபாவாகும்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதரகம் இதற்கான அனுசரனையை வழங்கியதுடன், மாவட்ட செயலக சமூக சேவைகள் இதற்கான ஒழுங்கேற்பாடுகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க