வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்-

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் நலன் கருதியும், ஊழியர்கள் காகித உற்பத்தியில் காட்டிவரும் ஆர்வத்தினையும் பாராட்டி ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை கவனத்தில் கொண்டு, காகித ஆலையின் பிரதம நிறைவேற்றுப் இணைப்பாளர் எஸ்.வி.சுதர்மசிறி, கண்டியைச் சேர்ந்த தமது நண்பரான ரஞ்சித் சிறிவர்த்தனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இவ் உலர் உணவுப் பொதிகள் சுமார்150 பேருக்கு வழங்கப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பொசன் தினத்தினை முன்னிட்டு இவ் மனிதநேய உதவி வழங்கப்பட்டது.

தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான பௌத்த மதகுருவான வல்பொறுவே பியரத்ன தேரோ மற்றும் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஜோர்ஜ் கென்பல் ஆகியோர்கள் இவ் உலர் உணவுப் பொதிகளை வழங்க அனுசரனை வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் டாக்டர் இளங்ககோன், கணக்காளர் அம்பிகாவதி, உற்பத்தி முகாமையாளர் சி.சிவாகரன், கணக்காளர் அமில வீரசேகர ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அன்றைய தினம் காகித ஆலை வளவினுள் நூற்றுக்கும் மேற்பட்ட பயன்தரும் மரங்கள் நடப்பட்டது.

காகித ஆலையானதுகடந்த காலத்தில் தொழிற்படாத நிலையில் காணப்பட்டது. தற்போது 150 இற்கும் மேற்பட்ட ஊழியர்களினை கொண்டு மீண்டும் இயங்குகின்றது.

இதேவேளை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.