
வீதியில் நடந்து சென்ற நபர் பேருந்து மோதி உயிரிழப்பு
வீதியால் நடந்து சென்ற நபர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
அடம்பிடி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெலிமடையில் இருந்து பண்டாரவளை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்
குறித்த பேருந்தின் சாரதி வெலிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
-பதுளை நிருபர்-
