கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் புதிய இடம் திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருமையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் புதிதாக மாற்றஞ் செய்யப்பட்டுள்ள வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் இடம்பெற்ற புதிய இடம் திறந்து வைக்கும் நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி.ரீ.பிரபாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டு புதிய இடத்தினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்துள்ளதுடன், ஒரு டிப்ளோமா கற்கை நெறியும், மூன்று சான்றிதழ் கற்கை நெறிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திறந்த பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் பேராசிரியர் அ.அரியதுறை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உதவி உபவேந்தர் இ.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிதியாளர் எம்.எம்.எம்.பாரீஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி எஸ்.ஜெயராஜ், செனட் சபை உறுப்பினர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கற்கைகளுக்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளர்கள் ஏனைய திணைக்களங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்களின் நன்மை கருகி ஒன்பது வகையான கற்கை நெறிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



