
மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த நபர்
மொரட்டுவை-லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
