அத்துமீறி உள் நுழைந்த 24 இந்திய மீனவர்கள் கைது
-யாழ் நிருபர்-
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்களின் 5 படகுகில் பயணித்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட மீனவர்களின் ட்ரோலர் படகுகளே இவ்வாறு கடற்படையினர் பிடித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் நாளை காலை மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இதேவேளை பிடிக்கப்பட்ட 5 படகுகளில் இருந்த 24 மீனவர்களும் நாளை புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
